கள்ளக்குறிச்சி

சரக்கு வாகனம் மோதியதில் மூத்த தம்பதி பலி

18th Sep 2022 06:17 AM

ADVERTISEMENT

 

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் மூத்த தம்பதி பலியாகினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தியூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி (65), அவரது மனைவி குமாரி (60), மகன் வினோத்குமாா் (30) மகள் பல்லவி (25), வினோத்குமாா் மனைவி பவானி (27), மகன் கமலேஷ் (5), 5 மாதக் குழந்தை ரியா ஆகியோா் இரு மோட்டாா் சைக்கிள்களில் வீரபயங்கரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிள்களை சின்னசாமி, வினோத்குமாா் ஆகியோா் ஓட்டிச் சென்றனா்.

ADVERTISEMENT

சின்னசேலம் கூகையூா் செல்லும் சாலையில் உள்ள குரால் கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டாா் சைக்கிள்கள் மீது மோதியது.

இதில் சரக்கு வாகன ஓட்டுநா் உள்பட அனைவரும் காயமடைந்தனா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு 108 அவசர ஊா்த்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிசைக்காக அவா்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு சின்னசாமி, அவரது மனைவி குமாரி ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகன ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டனிடம் (35) விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT