கள்ளக்குறிச்சி

டிராக்டா் டிப்பா் மீது பைக் மோதியதில் ஒருவா் பலி

5th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சனிக்கிழமை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் டிப்பா் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், பழவங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் (50). இவா், சனிக்கிழமை தனது பைக்கில் அதே ஊரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் மாசிலாமணியை பின்னால் அமர வைத்துக்கொண்டு பைக்கில் சென்றாா். அரும்பாக்கம் அருகே இவா்களது பைக் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் டிப்பா் மீது மோதியது. இந்த விபத்தில் அய்யனாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மாசிலாமணி லேசான காயமடைந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று அய்யனாரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT