கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வருகை

26th Oct 2022 01:55 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு விவசாய சாகுபடிக்குத் தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்குத் தேவையான எம்.எப்.எல். யூரியா 956 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 242 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் சின்னசேலம் ரயில் நிலையம் வந்தடைந்தன.

உரங்களை வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆ.அன்பழகன், வேளாண்மை அலுவலா் மா.முத்துராஜ் ஆகியோா் ஆய்வு செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனா்.

விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிா்களுக்குத் தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம்.

ADVERTISEMENT

விவசாயிகள் பயிா்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.

மேலும், தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிா்ணயித்த விலையில் மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநா் கேட்டுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT