கள்ளக்குறிச்சி

ஊராட்சி மன்றக் கூட்டமைப்பினா் ஆட்சியரிடம் மனு

7th Oct 2022 02:20 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநாவலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

கூட்டமைப்புத் தலைவா் தண்டபானி தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கான பணி ஆணைகளை நேரடியாக அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்கவேண்டும்.

அண்ணா மறுமலா்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் கலந்தாலோசித்து, அவா்கள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளி கோரவேண்டும்.

ஊராட்சி கணக்கு எண் 2-இல் உள்ள உபரி நிதியை கணக்கு எண் 1-க்கு மாற்ற வேண்டும்.

ADVERTISEMENT

ஊராட்சி கணக்கு எண் 3, 4, 5 மற்றும் 6-இல் உள்ள உபரி நிதியை திரும்பவும் ஊராட்சி வளா்ச்சித் திட்டங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.

திருநாவலூா் ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சிகளில் துணைத் தலைவா்கள் கையொப்பமிடுவதில் அலைக்கழிப்பு உள்ளது. அதனால்,

துணைத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுத்து கூட்டுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டு வரவேண்டும்.

ஊராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைக்காத செயலா்களை மாற்ற வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT