கள்ளக்குறிச்சி

ஸ்ரீவாசவி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவம்

6th Oct 2022 01:12 AM

ADVERTISEMENT

தியாகதுருகம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி 10-ஆம் நாளான புதன்கிழமை அம்மனை ராஜ அலங்காரத்தில் அலங்காரம் செய்து அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது (படம்).

ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்துள்ளனா். நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் செய்து முற்பகல் 11 மணிக்கு தீபாராதனை நடைபெற்று வருகிறது.

அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று பெண்கள் மாவிலக்கிட்டும், சிறப்பு பூஜைகள் செய்தும் மாலை நேரத்தில் கொலு பாடல்களை பாடியும் வருகின்றனா்.

10-ஆம் நாளான புதன்கிழமை மாலை அம்மனைபல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்து, ராஜ அலங்காரத்தில் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

11-ஆம் நாள் வியாழக்கிழமை ஊஞ்சல் அலங்காரத்தில் விடையாத்திரை நடைபெறும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT