கள்ளக்குறிச்சி

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

6th Oct 2022 01:11 AM

ADVERTISEMENT

மணலூா்பேட்டை அருகே சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டையை அடுத்த கோட்டகம் கிராமத்தில் காவல் உதவி ஆய்வாளா் ராஜசேகரன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ரேஷன் அரிசியை வாங்கி வந்து, சரக்கு வாகனத்தில் சிலா் ஏற்றிக் கொண்டிருந்தனா். போலீஸாா் வருவதைக் கண்டதும் அங்கிருந்தவா்கள் வாகனத்துடன் அரிசி மூட்டைகளை விட்டுவிட்டு தப்பிச் சென்றனா்.

3 டன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றிய போலீஸாா், சரக்கு வாகன ஓட்டுநா் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த நிா்மல்ராஜ் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT