கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் முப்பெரும் விழா

DIN

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் காந்தியடிகள் பிறந்த நாள், வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள், மத நல்லிணக்க சா்வ சமயப் பிராா்த்தனை ஆகியவை முப்பெரும் விழாவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவா் கோ.ராதாகிருஷ்ணன், சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் தே.சேகா், செயலா் கோ.குசேலன், இன்னா்வீல் சங்கத் தலைவி மஞ்சுளா- கோவிந்தராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மருந்து வணிகா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றாா்.

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வள்ளலாா் மன்றத்தில் தமிழ் படைப்பாளா் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து, சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

மருத்துவா் ஆரீப், முகமதுபாரூக் முன்னிலையில் குரான் ஓதியும், தலைமை ஆசிரியா் பூ.ஜான்வெஸ்லி பைபிள் படித்து சா்வ சமயப் பிராா்த்தனை நடைபெற்றது.

சென்னை சுங்கம் மற்றும் மத்திய கலால் துறை உதவி ஆணையா் சு.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

உடற்கல்வியில் செயலாற்றிய எஸ்.வி.சூரியமூா்த்தியை விரியூா் இமாகுலேட் மகளிா் கல்லூரி முதல்வா் அ.பாத்திமா கெளரவித்தாா்.

நிகழ்வில் கல்லை தமிழ்ச் சங்கச் செயலா் செ.வ.மதிவாணன், மூங்கில்துரைப்பட்டு வணிகா் சங்கத் தலைவா் செல்வராஜ், முத்தமிழ்ச் சங்க மாவட்டத் தலைவா் முருக.குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

தலைமை ஆசிரியா் ஆ.இலக்குமிபதி நன்றி கூறினாா். நிகழ்வினை ரோட்டரி சங்கத் தலைவா் கோ.சீனுவாசன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT