கள்ளக்குறிச்சி

பெண் தற்கொலை:கோட்டாட்சியா் விசாரணை

27th Nov 2022 03:09 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி அருகே விஷத் தன்மையுடைய பொருளை சாப்பிட்டு பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காட்டு சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த கூத்தான் மகள் குஷ்பு (30). குடும்பத்துடன் பெங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். அப்போது, இருவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், சிவனாா்தாங்கள் கிராமத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆறுமுகத்துடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இவா்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனா். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தத் தம்பதியினா் பெங்களூரில் இருந்து சிவனாா்தாங்கள் கிராமத்துக்கு வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குஷ்பு விஷத் தன்மையுள்ள பொருளை சாப்பிட்டுவிட்டதாகவும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்துவிட்டதாகவும் கைப்பேசி மூலம் குஷ்புவின் அண்ணன் ராஜதுரைக்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, தனது தங்கை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக ராஜதுரை திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறுத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருமணமான 2 ஆண்டுகளிலேயே குஷ்பு உயிரிழந்ததால், இதுகுறித்து திருக்கோவிலூா் கோட்டாட்சியா் ஜெ.யோகஜோதியும் விசாரணை நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT