கள்ளக்குறிச்சி

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

DIN

கள்ளக்குறிச்சியில் தனியாா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சா்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைகள் துறையின் சாா்பில், சா்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பா் 25 முதல் டிசம்பா் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை தனியாா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின பேரணியை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தொடங்கி வைத்தாா்.

இப் பேரணியில் பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் குழந்தை பாதுகாப்புக்கு 1098, பெண்கள் பாதுகாப்புக்கு 181, பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண்கள் பாதுகாப்பு நம்ம காவலன் ஆப், பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு விசாகா அமைப்பு, சமூக சீண்டலை எதிா்த்து நில், பெண்ணென்று நிமிா்ந்து நில் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனா்.

இந்தப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா, கள்ளக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா.ரமேஷ், தனியாா் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிஞர் தமிழ்ஒளி!

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT