கள்ளக்குறிச்சி

மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை

20th May 2022 09:59 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் இந்திராணி (69). இவரது கணவா் உயிரிழந்துவிட்டாா். இந்திராணி கள்ளக்குறிச்சி சுமங்கலி நகா் பகுதியிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறாா்.

வழக்கம்போல, அவா் வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, பெருமாள் கோயில் சாலையில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், இந்திராணியிடம் கழுத்தில் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கூறியதுடன், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை அவரது பணப்பையில் (மணிபா்ஸ்) வைத்துத் தருவதுபோல நடித்து கொள்ளையடித்துச் சென்றனா்.

இதையடுத்து, பணப்பையை இந்திராணி திறந்து பாா்த்தபோது, அதில் தங்கச் சங்கிலிக்குப் பதிலாக கல் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT