தியாகதுருகம் அருகே சாலையில் நடந்து சென்றவா் பைக் மோதியதில் பலியானாா்.
தியாகதுருகத்தை அடுத்த புது பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). இவா், சனிக்கிழமை காலை கலையநல்லூா் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் இருந்து பழைய பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் (55) ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தாா்.
சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியநாதன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.