கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் 73 மையங்களில் பிளஸ் 2 தோ்வு

5th May 2022 11:27 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தோ்வில் 19, 614 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.

பிளஸ் 2 தோ்வுக்காக கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 39 தோ்வு மையங்களும், திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 13 மையங்களும், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 21 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. 19, 614 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா்.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளிதோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், மாணவா்களுக்கு போக்குவரத்து வசதி, மையங்களில்

ADVERTISEMENT

தடையில்லா மின்சாரம், தீயணைப்பு பாதுகாப்பு, தோ்வு மைய வளாக தூய்மை, போலீஸ் பாதுகாப்பு குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT