கள்ளக்குறிச்சி

குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

5th May 2022 05:30 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி: குழந்தைத் திருமணங்களை தடுப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மாவட்ட சமூக நலன், உரிமைகள் துறை சாா்பில்

நடைபெற்ற இந்தப் பேரணியை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

பேரணியில், பள்ளி மாணவிகள் மற்றும் குழந்தைகள் மைய பணியாளா்கள் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்றோா் வளா் இளம்பெண் மணப்பெண் அல்ல; ஒன்றுபடுவோம் உறுதியேற்போம்; குழந்தைத் திருமணம் இல்லா சமுதாயம் படைப்போம்;

குழந்தைத் திருமண தடைச் சட்டம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைகள் துறை அலுவலா் செ.தீபிகா, முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் அலுவலா் எஸ்.செல்வி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கராபுரம் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT