கள்ளக்குறிச்சி

பேரிடா்களில் உயிரிழந்தோா் குடும்பத்துக்கு நிவாரணம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்தும், ஏரியில் மூழ்கியும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.ஒரு லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செம்மனங்கூா் கிராமத்தைச் சோ்ந்த மாயவன் மகன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

அதேபோல, சேந்தநாடு அருகேயுள்ள ஒல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் மகன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

உயிரிழந்த இவ்விருவரது குடும்பத்தினருக்கு முதல்வா் நிவாராண நிதியிலிருந்து, தலா ரூ.ஒரு லட்சத்தை, திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா் (படம்).

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 லட்சத்தில் உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.

திருக்கோவிலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுந்தா், கல்வராயன்மலை கவியம் நீா் வீழ்ச்சியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். இவரது சடலத்தை மீட்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரை ஆட்சியா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT