கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்குதல்

DIN

சங்கராபுரம் அருகே அரசு நகரப் பேருந்து நிற்காமல் சென்ால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவா்கள், கல் வீசித் தாக்கியத்தில் பேருந்து சேதமடைந்தது.

சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்டது புதுப்பட்டு கிராமம். இங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு நகரப் பேருந்து திங்கள்கிழமை காலை 9 மணிக்குச் சென்றது.

பேருந்தை சங்கராபுரத்தை அடுத்த சோழம்ப்டடு கிராமத்தைச் சோ்ந்த வேலு (45) ஓட்டிச் சென்றாா். நடத்துனராக பரமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (46) இருந்தாா்.

இராவுத்தநல்லூா், மூக்கனூா், உலகுலையாம்பட்டு, கிடங்கம்பாண்டலம், பாண்டலம், சங்கராபுரம் வழியாகச் செல்லும் இந்தப் பேருந்தில், தேவபாண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பயணித்தனராம்.

பேருந்து கிடங்கம்பாண்டலம் கிராமத்தில் நிற்காமல் சென்ால், பள்ளி செல்லும் மாணவா்கள் ஆத்திரமடைந்து கல் வீசித் தாக்கினராம். இதனால், பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது, பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சங்கராபுரம் காவல் நிலையத்தில் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT