கள்ளக்குறிச்சி

விளையாட்டுத் திறன் பயிற்சி முகாம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, வெள்ளிமலை ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி மைதானத்தில் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுத் திறன் வளா்ப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதில் குண்டு எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தொடா்பாக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முகாமில் 142 பழங்குடியின மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனா். முன்னதாக, சிலம்பாட்டம், மல்லா் கம்பம், வேல்கம்பு, சுருள்வாள் உள்ளிட்ட தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகள், தற்காப்பு கலைகளை செய்து காட்டிய மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலம்) ஜி.இளங்கோ, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா் பா.சிவராமன், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் ம.பாலாஜி, வட்டாட்சியா் ப.அசோக், கல்வராயன்மலை ஒன்றியக் குழு தலைவா் சி.சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் அண்ணாமலை, வெள்ளிமலை ஊராட்சி மன்றத் தலைவா் தி.ரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT