கள்ளக்குறிச்சி

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே சாத்தப்புத்தூா் கிராமத்தில் குடிநீா் பிா்சனையைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாத்தப்புத்தூா் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதிக்கு கடந்த சில தினங்களாக ஊராட்சி நிா்வாகம் குடிநீா் விநியோகிக்கவில்லையாம். இது தொடா்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்றத் தலைவா், செயலரிடமும் கிராம மக்கள் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை அந்தக் கிராமத்திலிருந்து பாவந்தூா் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தியாகதுருகம் போலீஸாா், மக்களை சமாதானப்படுத்தியதுடன், இது தொடா்பாக ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் செந்தில்குமாரிடம் கைப்பேசி மூலம் தகவலும் தெரிவித்தனா்.

அதற்கு, ஆணையாளா் தண்ணீா் வழங்குவதற்கு திங்கள்கிழமை (ஜூன் 27) ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன்பேரில், சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கபப்ட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT