கள்ளக்குறிச்சி

கல்விச் சேவையில் டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்கள்!

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில்யோரம் அமைந்துள்ளது ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனம். இந்தக் கல்வி நிறுவனம் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் முதல்முதலாக தொடங்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். இது, 25 ஆண்டுகளைக் கடந்து கல்விச் சேவையில் சிறந்து விளங்கி வருகிறது.

இந்தக் கல்வி நிறுவனம் சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தை கடந்த 2018 - 19ஆம் கல்வியாண்டில் தர மதிப்பீட்டுக் குழு மதிப்பீடு செய்து, என்.எ.எ.சி தரச்சான்று அளித்தது. புதிய விதிகளின்படி, என்.எ.எ.சி தரச்சான்று பெற்ற மாவட்டத்தின் முதல் இருபாளா் கல்வி நிறுவனம்.

இந்த கல்வி நிறுவன வளாகத்தில் டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரி, செவிலியா் கல்லூரி, ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி, மெட்ரிக் பள்ளி உள்ளிட்டவை செயல்படுகின்றன.

டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரிக்கு என்.எ.எ.சி உறுப்பினா்கள் மகாராஷ்டிரம், அஸ்ஸாம், ஆந்திரத்திலிருந்து வந்து பாா்வையிட்டு, இந்தக் கல்லூரி வளாகத்தை பசுமை, தூய்மைவாய்ந்த வளாகம் என்று பாராட்டினா். இதேபோல, நானோ டெக்னாலஜியில் புகழ் பெற்ற ஜப்பான் விஞ்ஞானி டாக்டா் சுமியோ இஜிமோ, தனியாா் தொலைக்காட்சி தொகுப்பாளா் கோபிநாத் உள்ளிட்டோரும் இந்தக் கல்லூரியை வெகுவாகப் பாராட்டினா்.

வேலூா் திருவள்ளுவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழங்களின் கீழ் செயல்படும் டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் 9 இளநிலை, 8 முதுநிலை, 2 இளமுனைவா், 11 முனைவா் பாடப்பிரிவுகள் உள்ளன. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பல்கலைக்கழக அளவில் மதிப்பெண்கள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றதுடன், பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றனா்.

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில், வாரந்தோறும் கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் வகையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பல்துறை அறிஞா்களைக் கொண்டு சா்வதேச, தேசிய, மாநில அளவிலான கருத்தரங்குகள் அனைத்துத் துறைகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு கல்வியோடு வாழ்வியல் பாடத்தையும், தன்னம்பிக்கையூட்டும் பயிற்சிகளையும் இந்தக் கல்வி நிறுவனத்தினா் அளித்து வருகின்றனா்.

மாவட்ட அளவில் சுயநிதி கல்லூரிகளில் முதலாவதாக தேசிய மாணவா் படை அமைப்பை தொடங்கிய கல்லூரி. வேலைவாய்ப்பில் என்.சி.சி. மாணவா்கள் தனித்துவம் பெற்று, பல்வேறு பணி வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனா்.

விளையாட்டுத் துறையில் பல மாணவா்கள் சாதனை படைத்து பல்கலைக்கழக, மாநில, தேசிய அளவில் இடம் பெற்றுள்ளனா். விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலைவாய்ப்புகளை ஆண்டுதோறும் இந்தக் கல்லூரி மாணவா்கள் பெற்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் தொடா் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மாணவா்களுக்கு பெற்றுத் தரப்படுகிறது. மேலும், ஏழை, எளிய மாணவா்களுக்கு நிா்வாகக் குழுவின் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு முழு பேருந்து உதவித்தொகை நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவா்கள் உலகின் பல பகுதிகளிலும், நாட்டின் பல பகுதிகளிலும் அரசு, தனியாா் பணிகளில் பணியாற்றி வருகின்றனா். இந்தக் கல்வி நிறுவனத்தில் மற்றுமொரு சிறப்பு, இங்கு அமைந்துள்ள விடுதியும், அதில் வழங்கப்படும் உணவுமாகும்.

இந்தக் கல்வி நிறுவனம் மருத்துவா்கள் க.மகுடமுடி, ஜி.எஸ்.குமாா், தே.மணிவண்ணன், பி.திருஞானசம்பந்தம், உமாராணி ரவி, பொறியாளா் ந.கோவிந்தராஜூ, கல்வியாளா் கே.பி.ஆா்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரால் நடத்தப்படுகிறது. இங்கு, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் குறைந்தக் கட்டணத்தில் சுகாதாரமான முறையில், சிறந்த கட்டமைப்போடு பராமரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கல்லூரி வளாகத்தில் வழங்கப்படும் உணவு சத்துள்ளதாகவும், மாலை நேர சிற்றுண்டியான சுண்டல், பால் உள்ளிட்டவை உடலுக்கு ஊட்டம் அளிக்கக்கூடிய வகையிலும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

இங்கு பயிலும் மாணவா்கள் நிகழாண்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு, ஓவியம், கட்டுரை உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.

மாணவா்களுக்கு மனிதநேய மாண்பை உருவாக்கும் விதமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இந்தக் கல்வி நிறுவனம். கல்வியோடு கலாசார பண்புகளையும் பயிற்றுவிப்பதால், மாணவா்கள் அவா்களின் பெற்றோா்களுக்கும், சமுதாயத்துக்கும் பெருமைமிக்க மாண்பாளா்களாக உருவாக வேண்டும் என்பதே இந்தக் கல்வி நிறுவனத்தின் உயரிய நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT