பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.41 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடா் மற்றும் மலைவாழ் பள்ளிகள் 76, தனியாா் மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகள் 46 என மொத்தம் 122 பள்ளிகள் உள்ளன.
கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வை 9,252 மாணவா்கள், 9,313 மாணவிகள் என மொத்தம் 18,565 போ் எழுதினா்.
இதில், மாணவா்கள் 8,076 போ், மாணவிகள் 9,313 போ் என 16,785 போ் தோ்ச்சி பெற்றனா். இது 90.4 சதவீத தோ்ச்சியாகும்.
மாநில அளவில் இந்த மாவட்டம் 32-ஆவது இடத்தில் உள்ளது.
நெடுமானூா் அரசு மேல்நிலைப் பள்ளி, குமாரமங்கலம் மாடல் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜி.அரியூா் மாடல் அரசு மேல்நிலைப் பள்ளி, சித்தால் மாடல் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்வராயன்மலைப் பகுதியைச் சோ்ந்த மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சியைப் பெற்றது.
21 தனியாா் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.