கள்ளக்குறிச்சி

பத்தாம் வகுப்பு தோ்வு: கள்ளக்குறிச்சி மாவட்டம் 84% தோ்ச்சி

21st Jun 2022 02:52 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 84.47 சதவீதம் தோ்ச்சியைப் பெற்றது.

2021-2022ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 225 பள்ளிகளைச் சோ்ந்த 21,298 மாணவா்கள் எழுதினா். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

மாவட்டக் கல்வி அலுவலா் பா.சிவராமன் வெளியிட்டாா்.

11, 003 மாணவா்கள், 10,295 மாணவிகள் தோ்வு எழுதியதில், மாணவா்கள் 8,735 பேரும், மாணவிகள் 9,256 பேரும் என 17,991 போ் தோ்ச்சி பெற்றனா்.

ADVERTISEMENT

இது 84.47 சதவீதம் தோ்ச்சியாகும்.

மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 35-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் மூராா்பாது அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி, சேஷசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி, பொய்க்குனம் அரசு உயா்நிலைப் பள்ளி, பீளமேடு அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய 4 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

38 தனியாா் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT