கள்ளக்குறிச்சி

ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

14th Jun 2022 03:17 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பெரியாண்டச்சி (எ) பத்ரகாளியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணக்கு விஸேஷ சாந்தி கோபர கலச ஸ்தானம் திராவிடவேதம், பிற்பகல் ஒரு மணிக்கு பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு 3-ஆம் கால யாகம் விஸேஷ திரவ்யாஹூதி, 108 விதமான மங்களப் பொருள்கள், பலவிதமான அன்ன வகை, இனிப்பு வகை, கனி வகை, சமித்து வகை, தானிய வகை, பூ வகை, பிரச வகைகளை கொண்டு விஸேஷ திரவ்யாஹூதி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மங்கள வாத்தியம், சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, 4-ஆம் கால யாகம் நடைபெற்றது. 6 மணிக்கு மஹா பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

7.15 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT