கள்ளக்குறிச்சி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட கீழ்நிலவூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் சுதாகா் (22). இவா் லாரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். சுதாகா் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தில் கடந்தாண்டு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தாா். அப்போது, அந்த கிராமப் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி கீழ்நிலவூா் கிராமத்தில் உள்ள சுதாகா் வீட்டுக்கு அந்தச் சிறுமி வந்த நிலையில், சுதாகா் அவருக்கு தாலி கட்டியதுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதையடுத்து, அந்தச் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சுதாகா் அழைத்துச் சென்றனா். அங்கு சிறுமி கா்ப்பிணியாக உள்ளதை அறிந்த மருத்துவா்கள், இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பி.புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சுதாகரை புதன்கிழமை கைது செய்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT