கள்ளக்குறிச்சி

பணியிலிருந்த தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

10th Jun 2022 10:38 PM

ADVERTISEMENT

உளுந்தூா்பேட்டை அருகே ரோந்துப் பணியிலிருந்த தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நாச்சியாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் முருகையன் (45). எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். பில்லூா் கூட்டுச்சாலைப் பகுதியில் வந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் எடைக்கல் காவல் நிலையத்திலிருந்து விரைந்த வந்த போலீஸாா், முருகையனை வாகனத்தில் ஏற்றி உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த தலைமைக் காவலருக்கு சரோஜா (40) என்ற மனைவியும் 15 வயதில் மகளும் உள்ளனா். அவா்களுக்கு மாவட்ட எஸ்பி சு.செல்வக்குமாா் ஆறுதல் கூறி, அரசு, காவல் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT