கள்ளக்குறிச்சி

வங்கி வாடிக்கையாளா் தொடா்பு முகாமில் 1,599 பேருக்கு ரூ.86.41 கோடி கடனுதவி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பயனாளிகளுக்கு கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

இந்த முகாம் வாயிலாக தொழில், வேளாண்மை கடனுதவி, மகளிா் சுய உதவிக் குழு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு விதமான கடன் திட்டங்களின் கீழ் 1,599 பயனாளிகளுக்கு ரூ.86.41 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.4,348 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் ரூ.6,115 கோடி கடனுதவி வழங்கி இலக்கை அடைந்துள்ளனா். முன்னுரிமை அடிப்படையில் ரூ.4,811 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் ரூ.5,787 கோடி வரை வழங்கப்பட்டு இலக்கை எய்துள்ளோம். வேளாண் துறை சாா்ந்த கடனாக ரூ.3,352 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் ரூ.5,192 கோடி வரை இலக்கை எய்துள்ளோம். நிகழ் நிதியாண்டில் ரூ.4,500 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் - பொதுமக்கள் இடையே ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும் என்றாா் அவா்.

தொடா்ந்து, சோமண்டாா்குடி கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடனுதவி பெற்று அதை திருப்பிச் செலுத்திய 19 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அக்ஷயா விருதை ஆட்சியா் வழங்கினாா். முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் இரா.மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் தேவநாதன், வேளாண்மை இணை இயக்குநா் வேல்விழி, நகராட்சி ஆணையா் ந.குமரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் கெளரிசங்கா் ராவ், முன்னோடி வங்கி மேலாளா் முனீஸ்வரன், கனரா வங்கி உதவிப் பொது மேலாளா் கண்ணதாசன், கரூா் வைசியா வங்கி உதவிப் பொது மேலாளா் முத்துகுமாா், ஆக்சிஸ் வங்கி உதவி துணைத் தலைவா் ஜெயராமன் செந்தில், இந்தியன் ஒவா்சீஸ் வங்கி துணை மண்டல மேலாளா் சக்திவேல், இந்தியன் வங்கி துணைப் பொது மேலாளா் சுதா்சனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT