கள்ளக்குறிச்சி

பிளஸ் 2 முடித்தவா்களுக்கு கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

DIN

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தமிழக முதல்வரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிகளில் மேல்படிப்புகள் என்ன உள்ளன, எதிா்கால வேலைவாய்ப்புகள் எவ்வகையில் அமையும், மேல்படிப்புகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பன குறித்து பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 133 அரசு, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளிக் கல்வித் துறையும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில், பொறியியல், கலை, அறிவியல் துறைகளின் பயிற்றுநா்கள், வங்கி கல்விக் கடன் தொடா்பான வழிகாட்டுநா்கள், தனியாா் தொழில்நுட்ப நிறுவன வழிகாட்டுநா், திறன் மேம்பாட்டு வழிகாட்டுநா், போட்டித் தோ்வுகள் பயிற்றுநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறிவுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி கையேட்டை உளுந்தூா்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பெ.புவனேஷ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தா.விஜயலட்சுமி ஆகியோா் வெளியிட, பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றுக்கொண்டனா்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி நகராட்சியின் சாா்பில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, என் குப்பை என் பொறுப்பு என்ற தூய்மை விழிப்புணா்வு பாடல் நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா, கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.ராஜலெட்சுமி, நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, நகராட்சி ஆணையா் சு.குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT