கள்ளக்குறிச்சி

சாலையோர பள்ளத்தில்காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் பலி

1st Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். உடன் சென்ற வங்கி மேலாளா் காயமடைந்தாா்.

சென்னை முகப்போ் பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் விக்னேஷ் (30). இவா், சேலம் பாப்பம்பாடியில் செயல்படும் அரசுடைமை வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். விக்னேஷ் சென்னைக்கு வியாழக்கிழமை அவரது காரில் சென்றுகொண்டிருந்தாா். இந்தக் காரை சேலம் மாவட்டம், சின்னேரி பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சுரேஷ் (32) ஓட்டிச் சென்றாா்.

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் பகுதியில் இந்தக் காா் வந்தபோது, முன்னால் சென்ற மொபெட்டின் மீது மோதாமலிருக்க காரை ஓட்டுநா் திருப்பினாா். அப்போது, காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநா் உள்பட இருவரும் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு காா் ஓட்டுநா் சுரேஷ் உயிரிழந்தாா். விக்னேஷ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT