கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசுக் கல்லூரி கட்டடப் பணிகள் ஆட்சியரிடம் எம்எவ்ஏ கோரிக்கை மனு

1st Jul 2022 02:32 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான கட்டடப் பணிகளை தொடங்க வலியுறுத்தி, தொகுதி எம்.எல்.ஏ. மா.செந்தில்குமாா் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரி கடந்த 2011-2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 4 பாடப் பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்தது.

கடந்த 2017-2018-ல் சிறுவங்கூரில் சமத்துவபுரம் அருகே புதிய கட்டடத்துக்கு கல்லூரி மாற்றப்பட்டது. பின்னா், அந்தக் கட்டடம் கரோனா நோயாளிகள் கிசிச்சைக்காக ஒதுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி நடைபெற்று வந்தது. பின்னா், ஏமப்போ் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

தற்போது, இந்தக் கல்லூரியில் 7 இளநிலை பாடப்பிரிவுகளும், 4 முதுநிலை பாடப்பிரிவுகளும் உள்ளன. 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

கல்லூரி தற்போது கனியாமூரில் தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள், ஆசிரியா்கள் இல்லாமல் மாணவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

குதிரைச்சந்தல் கிராமத்தில் 5 ஏக்கா் நிலத்தில் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக 2020-ஆம் ஆண்டு அரசு ரூ.11.25 கோடி நிதி ஒதுக்கியது.

நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை கட்டடப் பணிகள் தொடங்காமல் உள்ளது. அதனால், கட்டடப் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் பி.என. ஸ்ரீதரிடம் மனு அளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT