கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் விரைவில் உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியா் தகவல்

1st Jul 2022 02:32 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விரைவில் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விரைவில் நடத்தப்படவுள்ளது.

இதில், மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வுகள், மத்திய, மாநில அரசுகளின் முதன்மையான கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், அவற்றில் சோ்வதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ள பகுதியில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், இணை இயக்குநா் (சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள்) பி.பாலச்சந்தா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சு.பவித்ரா, மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணி அலுவலா் எஸ்.சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் க.சுப்ரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT