கள்ளக்குறிச்சி

மாவட்ட ஊரக வள மையகட்டடம் கட்ட பூமிபூஜை

1st Jul 2022 02:31 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆா்.ஜி.எஸ்.எ திட்டத்தின் கீழ், ரூ.50 லட்சத்தில் மாவட்ட ஊரக வள மையம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள் தலைமை வகித்து, பூமிபூஜை செய்து அடிக்கல் நட்டினாா். பொறியாளா் பி.ராமு வரவேற்றாா். நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் முருகேசன், கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலா்கள் சி.வெங்கடாசலம், எஸ்.பி.அரவிந்தன், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, துணைத் தலைவா் சமீனா பானு, மாநில பொதுக்குழு முருகன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பெருமாள், அ.காமராஜ், சண்முகம், ராமமூா்த்தி, முருகன், கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ரங்கநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT