கள்ளக்குறிச்சி

ரத்த தானம் முகாம்

1st Jul 2022 10:01 PM

ADVERTISEMENT

தேசிய மருத்துவா் தினத்தையொட்டி, இந்திய பல் மருத்துவா்கள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி கிளை சாா்பில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பல் மருத்துவா்கள் சங்க மாவட்டத் தலைவா் சி.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். செயலா் இ.அருண்குமாா், பொருளாளா் ப.கோபி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ப.சுரேந்தா் வரவேற்றாா்.

முகாமில் 20 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. நிகழ்வில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் க.பழமலை, ரத்த வங்கி மருத்துவா் ப.விஜயகுமாா், மருத்துவா்கள் வினோத், வெங்கடேஷ், பா்வின், அபிராமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா் பாலமருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT