கள்ளக்குறிச்சி

சேதமடைந்த மின் கம்பத்தால் விபத்து நிகழும் அபாயம்

1st Jul 2022 10:01 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் சேதமடைந்த நிலையிலுள்ள மின் கம்பத்தால் அந்தப் பகுதியில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தியாகதுருகம் பேரூராட்சிக்குள்பட்ட பெரியமாம்பட்டு கிராமம், கோட்டை பிள்ளையாா் குளம் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இந்த மின் கம்பத்தின் மேல் பகுதியில் உயா் மின்னழுத்த கம்பிகளும், அதற்கு கீழ் பகுதியில் மின் மோட்டாா்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகளும் செல்கின்றன.

அதிவேகமாக காற்று அடித்தால் இந்த மின் கம்பம் முறிந்து விழுந்த இந்தப் பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மின் வாரியத்தினா் இந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT