கள்ளக்குறிச்சி

வாக்காளா் தினம்: மரக்கன்று நட்டுவைத்த ஆட்சியா்

26th Jan 2022 09:05 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை மரக்கன்று நட்டு வைத்தாா். 

12-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாக்களா் தின உறுதிமொழி ஏற்றனா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பா.இராஜவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஏ.இராஜாமணி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, சின்னசேலம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்த்து ஜனநாயகக் கடமையாற்ற வலியுறுத்தி ஆட்சியா் மரக்கன்று நட்டுவைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT