கள்ளக்குறிச்சி

மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

26th Jan 2022 09:05 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணிச் செயலா் ஜெ.பாக்யராஜ் தலைமை வகித்தாா்.

அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், எம்எல்ஏ மா.செந்தில்குமாா், தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத் தலைவரும், ஒன்றியச் செயலருமான அ.ராஜசேகா், முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலு பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் இரா.குமரகுரு பங்கேற்று மொழிப்போா் தியாகிகள் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் நகரச் செயலா் எம்.பாபு, ஒன்றியச் செயலா்கள் அ.தேவேந்திரன், வெ.அய்யப்பா, மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, கூட்டுறவு சங்கத் தலைவா் அ.ரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT