கள்ளக்குறிச்சி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

24th Jan 2022 11:23 PM

ADVERTISEMENT

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், பெண் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2016, 2017-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் சராசரியாக 9.54-ஆக இருந்த பெண் குழந்தைகள் விகிதம் தற்போது 8.78-ஆக குறைந்துள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 2020-2021-ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியானதில், குழந்தைப் பேறு விகிதம் குறைந்திருப்பதால், நாட்டின் மக்கள தொகை இனி வரும் காலங்களில் குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாகக் குறைய தொடங்கிய பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தற்போது 8.78 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது என அந்தக் கணக்கெடுப்பின் தகவல் சுட்டிக் காட்டியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பெண் குழந்தைகளைப் பிறப்பிலிருந்தே பாதுகாக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளையும் எண்ண வேண்டும். பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT