கள்ளக்குறிச்சி

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

24th Jan 2022 06:03 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே திருமணமாகாத விரக்தியில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அமல்ராஜ் (24). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளாக பெண் பாா்த்தும் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், அமல்ராஜ் கடந்த 4-ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்தாா். உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமல்ராஜ், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT