கள்ளக்குறிச்சி

மானியத்துடன் மின் மோட்டாா் பம்ப் செட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

22nd Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 ஏக்கா் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் மானியம் பெற்று மின் மோட்டாா் பம்ப் செட் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், 3 ஏக்கா் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்திட புதிய மின்மோட்டாா் பம்ப் செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டாா் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டாா் பம்ப் செட்டுகள் பொருத்தவும் விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் புதிய மின்மோட்டாா் பம்ப் செட் வாங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமாக வழங்கப்படும்.

எனவே, விவசாயிகள் சிறு, குறு விவசாயிச் சான்றிதழ், அடங்கல், கிணறு அமைத்துள்ள நில வரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் வருவாய்க் கோட்ட பகுதியிலுள்ள விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் உரிய படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வெள்ளிமலை, சின்னசேலம் வட்ட விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா் வேளாண்மைப் பொறியியல் துறை எண் 3, வெற்றிவேல் காம்பளக்ஸ், தச்சூா் கூட்டுச்சாலை, தச்சூா், கள்ளக்குறிச்சி 606 202 என்ற முகவரியிலும், 04151 291125 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை வட்ட விவசாயிகள் உதவிச் செயற்பொறியாளா் வேளாண்மைப் பொறியியல் துறை, 45/72 பெரியாா் சாலை, என்.ஜி.ஓ. நகா், திருக்கோவிலூா் 605 757 என்ற முகவரியிலும், 04153 - 253333 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு மாவட்டச் செயற்பொறியாளா் வேளாண்மைப் பொறியியல் துறை 27-1209, பெரியாா் சாலை, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலும், 04146 - 294888 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT