கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டம் - ஒழுங்கு: ஆட்சியா் தலைமையில் ஆய்வு

21st Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய், காவல் துறை அலுவலா்களுடன் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும், சாலை விபத்துகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

கல்வராயன்மலை முதல் கள்ளக்குறிச்சி வரையுள்ள மலைப் பாதைகளில் வேகமாக வரும் வாகன ஓட்டிகளை கண்காணித்து, மலைப் பாதைகளில் மெதுவாக சென்றிடவும், முகக் கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளவும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினா், காவல் துறையினா் அறிவுரைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. இதேபோன்று, வரும் காலங்களிலும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலைகளில் தேவையான தடுப்புகள், தற்காலிக வேகத் தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகளை அமைத்திட காவல் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியா் அறுவுறுத்தினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.விஜய்பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியா்கள் எஸ்.சரவணன் (கள்ளக்குறிச்சி), கி.சாய்வா்த்தினி (திருக்கோவிலூா்), கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் ந.குமரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ரெ.ரெத்தினமாலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT