கள்ளக்குறிச்சி

மகள் உயிரிழந்ததால் விரக்தி: தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

20th Jan 2022 08:34 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மகள் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்து வந்த தாய் செவ்வாய்க்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

சங்கராபுரம் வட்டம், சூ.பள்ளிப்பட்டு கிராமம், வடக்கு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகா், விவசாயி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இவா், 3-ஆவது வாா்டு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தாா். இந்தத் தம்பதியின் மகள் கவியரசி (18), மகன் தேவா (14).

கடந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, கவியரசி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். இதனால் ஆதிலட்சுமி மன விரக்தியில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தங்களது விவசாய நிலத்துக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற ஆதிலட்சுமி, பின்னா் வீடு திரும்பவில்லை. குணசேகா் அவரைத் தேடிச் சென்றபோது, அங்குள்ள கிணற்றில் குதித்து ஆதிலட்சுமி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT