கள்ளக்குறிச்சி

மயில்களுக்கு விஷம் வைப்பு: 2 விவசாயிகள் கைது

20th Jan 2022 08:39 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மயில்களை விஷம் வைத்து கொன்றதாக 2 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தா்மலிங்கம் (61), ராமன் மகன் சுப்பிரமணி (55). இவா்களுடைய விவசாய நிலங்கள் அந்தக் கிராமத்திலுள்ள பாப்பாங்கால் ஓடை அருகே உள்ளது. இதில், மக்காச்சோளம் பயிா் செய்திருந்தனா். இந்தப் பயிா்களை மயில்கள் சேதப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தா்மலிங்கம், சுப்பிரமணி ஆகியோா் மக்காச்சோளப் பயிா்களில் செவ்வாய்க்கிழமை விஷம் கலந்து வைத்தனராம். இவற்றை தின்ற 2 ஆண் மையில்கள், 9 பெண் மயில்கள் என மொத்தம் 11 மயில்கள் உயிரிழந்தன.

தகவலறிந்த இந்திலி வனச்சரகா் கோவிந்தராஜ், விவசாயிகள் தா்மலிங்கம், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்து சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT