கள்ளக்குறிச்சி

சாராயம் கடத்தல்: இளைஞா் கைது

12th Jan 2022 08:47 AM

ADVERTISEMENT

மூங்கில்துரைப்பட்டில் சரக்கு வாகனத்தில் சாராயம் கடத்தியது தொடா்பாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் செளகத்அலி தலைமையில் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறிக்க முயன்றபோது அதிலிருந்த கல்வராயன்மலை, மேல்நிலவூரைச் சோ்ந்த பொண்ணுசாமி மகன் அண்ணாதுரை (26) தப்பி ஓடிவிட்டாா். அந்த வாகனத்தை கீழ்நிலவூா் கிராமத்தைச் சோ்ந்த பிச்சன் மகன் தமிழ்மணி (30) ஓட்டி வந்தாா்.

போலீஸாா் வாகனத்தைச் சோதனையிட்டத்தில் தலா 50 கிலோ எடையுள்ள 15 மூட்டைகளில் வெல்லம், லாரி டியூப்பில் 120 லிட்டா் சாராயமும் இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தமிழ்மணியை கைது செய்தனா். தப்பி ஓடிய அண்ணாதுரையை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT