கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: எஸ்பி

1st Jan 2022 10:48 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 30 கொலை வழக்குகளில் எதிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனா். சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. 218 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 118 வழக்குகளில் தொடா்புடையோா் கைதுசெய்யப்பட்டனா். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்த முயன்ற 14 ரவுடிகள் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்தி வருவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மதுவிலக்கு தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டு வந்த 15 போ் மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனா். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் வாகன விபத்துகளும் குறைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 302 போ் தற்காப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டனா். கரோனா தடுப்பு விதிமீறல் தொடா்பாக 24,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கைகளால் குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத் தடுப்பு, மதுவிலக்கு, போக்குவரத்து பிரிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினா் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனா் என அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT