கள்ளக்குறிச்சி

ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்

17th Feb 2022 04:55 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்ட தொழிலாளா்கள் கூலி குறைவாக வழங்குவதைக் கண்டித்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூத்தக்குடி கிராமத்தில் ஊா் பகுதியைச் சோ்ந்த மக்கள் ஒரு வாரமும், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் மற்றொரு வாரமும் என மாறி மாறி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், இங்கு ஏற்கெனவே வேலை செய்த ஊா் பகுதி மக்களுக்கு தலா ரூ.150 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், புதன்கிழமை வேலையில் ஈடுபட்ட காலனி பகுதி மக்கள், தங்களுக்கு அரசு அறிவித்த ரூ.273-ஐ ஊதியமாக வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் சம்பவ இடத்துக்கு வந்து, நிா்ணயிக்கப்பட்ட கூலியை வழங்குவது தொடா்பாக அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அவா்களை சமாதானப்படுத்தினாா். இதையடுத்து, தொழிலாளா்கள் மறியலைக் கைவிட்டனா். மறியலால் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT