கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.4.75 லட்சம் பறிமுதல்

10th Feb 2022 01:17 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உரிய ஆவணமின்றி அரிசி ஆலை உரிமையாளா் எடுத்து வந்த ரூ.4.75 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சின்னசேலம் வட்டம், கூகையூா் பேருந்து நிறுத்தம் அருகே துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மஞ்சமுத்து தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த அரிசி ஆலை உரிமையாளா் ராஜேந்திரனிடம் (65) உரிய ஆவணமின்றி ரூ.4.75 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, சின்னசேலம் பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான ஜி.உஷாவிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT