கள்ளக்குறிச்சி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

9th Feb 2022 12:01 AM

ADVERTISEMENT

 

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கணினி மூலம் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஐ.எஸ்.மொ்சி ரம்யா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை நகராட்சி ஆணையா்கள், தியாகதுருகம், வடக்கநந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலூா்பேட்டை ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT