கள்ளக்குறிச்சி

மாவட்ட தமாகா நிா்வாகிகள் கூட்டம்

11th Dec 2022 06:34 AM

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தியாகதுருகம் தனியாா் விடுதி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆதையூா் பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் எம்.பி.கணேசன், மாநில இணைச் செயலாளா் ஜெயமூா்த்தி முன்னிலை வகித்தனா். சின்னசேலம் நகரத் தலைவா் பழனிசாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆா்.எஸ்.வெங்கடேசன் பங்கேற்று கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். கூட்டத்தில் ஆறுமுகம், மயிலாசனம், சசிகுமாா், ஜான்போஸ்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் வட்டாரத் தலைவா் காமராஜ் நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT