கள்ளக்குறிச்சி

பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் பலி

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சின்னசேலம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம் சிறுபாக்கம் அடுத்த அரசங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் குரு (20), ஓட்டுநா்.

இவா் வெள்ளிக்கிழமை கூட்ரோடு செல்வதற்காக விருத்தாசலம் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். வி.கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிா் திசையில் வந்த சரக்கு வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது நேருக்கு நோ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, கீழ்குப்பம் போலீஸாா் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டத்துக்குட்பட்ட சரவணன் (38) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT