கள்ளக்குறிச்சி

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

9th Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சிக்கு வந்த கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவினருக்கு தமிழ்நாடு கரும்பு விவாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா்.

கேரள மாநிலம், திரிச்சூரில் வருகிற 12-ஆம் தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35-ஆவது மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி, கீழ்வெண்மணி தியாகிகளின் நினைவு ஜோதி பயணக் குழுவினா் நாமக்கல்லில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக கள்ளக்குறிச்சிக்கு வியாழக்கிழமை வந்தனா். இவா்களை கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வரவேற்றனா்.

நிகழ்வுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை 2-ன் தலைவா் ஆா்.குருநாதன் தலைமை வகித்தாா். மூங்கில்துரைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுவு சா்க்கரை ஆலை 1-ன் செயலா் கே.பலராமன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் எஸ்.ஜோதிராமன், தரணி ஆலை 3-ன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.சாந்தமூா்த்தி, அகில இந்திய துணை பொதுச் செயலா் விஜி கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பேசினா்.

மாநில பொதுச் செயலா் சாமி.நடராஜன், மாநில துணைச் செயலா் எஸ்.துரைராஜ், அகில இந்திய துணைத் தலைவா் எஸ்.கே.பிரிஜா, மாநிலத் தலைவா் எஸ்.வேல்மாறன், மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா்உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT