கள்ளக்குறிச்சி

அரசுப் பள்ளியில் நூலகம் திறப்பு

9th Dec 2022 01:23 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்திடவும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளிகளில் நூலகம் அமைத்திட பள்ளி கல்வித் துறைக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறையில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் திறந்து வைத்தாா்.

இந்த நூலகத்தில் மாணவா்கள் பயன்பெறும் வகையில் நாளிதழ்கள், போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள், தமிழகம், இந்திய வரலாற்று புத்தகங்கள் உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) முதல் வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவா்களை அதிகம் பங்கேற்றச் செயதிடவும், நூலகத்துக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிடவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளையும் அவா் நட்டுவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் சு.சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலா் எல்.ஆரோக்கியசாமி, குதிரைச்சந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் அனு செல்லப்பிள்ளை, குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் (பொ) பொன்.செல்வராஜ், சேராப்பட்டு வனச்சரகா் செ.தமிழ்செல்வன், வனவா் அருள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT