கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சிக்கு ரூ.69.41 லட்சம் கொடிநாள் வசூல் இலக்கு: மாவட்ட ஆட்சியா் தகவல்

8th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டு கொடிநாள் வசூல் இலக்காக ரூ.69.41 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தெரிவித்தாா்.

முப்படைகளில் பணியாற்றிய வீரா்களின் தியாகத்தையும், வீரச் செயல்களையும் போற்றிடும் பொருட்டு படை வீரா் கொடிநாள் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஷ்வரன்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொடிநாள் நிதி வசூல் சென்ற ஆண்டு ரூ.65.70 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், ரூ.62 லட்சத்து 6 ஆயிரம் வசூலானது.

ADVERTISEMENT

இந்த இலக்கை அடைய உறுதுணையாக பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலா்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழாண்டுக்கு ரூ.69.41லட்சம் வசூல் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வசூல் இலக்கை பல மடங்காக எய்திட அனைத்துத் துறை அலுவலா்களும், பொதுமக்களும் தாராளமாக நிதி அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 500 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 44 லட்சத்து, 17 ஆயிரத்து 501 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா்.

இதைத் தொடா்ந்து, கொடிநாள் நிதி இலக்கினை 100 சதவீதம் எய்திய மற்றும் இலக்கிற்கு மேல் நிதி திரட்டிய 4 அரசுத் துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், 2019-ஆம் ஆண்டு கொடி நாள் வசூலில் 3 லட்சத்துக்கு மேல் வசூல்செய்த 3 துறை அலுவலா்களுக்கு தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 30 கிராம் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 3 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், முன்னாள் படை வீரா் நல அமைப்பாளா் கோ.விஜயகுமாா், உதவி ஆணையா் (கலால்) பா.ராஜவேல், முதன்மைக் கல்வி அலுவலா் சு.சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கே.கவியரசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எஸ்.செல்வி உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT