கள்ளக்குறிச்சி

விட்டுமனைத் தகராறில் அண்ணனை எரித்துக் கொல்ல முயற்சி: மாற்றுத்திறனாளி கைது

7th Dec 2022 03:16 AM

ADVERTISEMENT

வீட்டுமனைத் தகராறில் அண்ணன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாக, மாற்றுத்திறனாளியான தம்பியை மணலூா்பேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட அரகண்டநல்லூரைச் சோ்ந்தவா் பலராமன். இவரது மகன்கள் இளங்கோவன் (54), நந்தகோபால் (48). இதில், நந்தகோபால் மாற்றுத்திறனாளி.

பலராமனுக்கு விளந்தை கிராமம் பிருந்தா நகரில் வீட்டுமனை உள்ளதாம். அந்த இடத்தை நந்தகோபால் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளாா். இதில் ஏற்பட்ட தகராறில், அங்கு இருவரும் கடந்த 10 நாள்களுக்கு முன் குடிசை போட்டு வசித்து வந்துள்ளனா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை இருவரும் மது அருந்திவிட்டு இருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த நந்தகோபால் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து அண்ணன் இளங்கோ மீது ஊற்றி தீ வைத்தாராம்.

ADVERTISEMENT

அவரை அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT